பார்க்கிங் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்
நவ 21, 2023
Advertisement
புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் "பார்க்கிங்". சோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. பார்க்கிங் பிரச்சினையால் ஒருவன் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவான் என்பதை ஆழமாக காட்சிப்படுத்தி இந்த படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி அன்று வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!