
ரத்த பரிசோதனை செய்யுங்க... வாரன்ட் இன்றி போலீசார் ரெய்டு : பாலாஜி முருகதாஸ் காட்டம்
முறையான வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாஜி முருகதாஸ் வீடியோ வெளியிட்டார். மேலும் இதுபற்றி எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‛‛நான் தெரிந்து கொள்ள விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். யார் என் மீது புகார் அளித்தார். நான் எவ்வளவோ முறை கேட்டும் போலீசார் பதிலளிக்கவில்லை. ரத்த பரிசோதனை செய்து கொள்ளக்கூட தயாராக இருக்கிறேன் என கூறினேன். 15 போலீசார் வந்தனர். இறுதியில் அவர்கள் கண்டு பிடித்தது 3 பூனையும், ஒரு நாயும் மட்டுமே"" என குறிப்பிட்டு முதல்வர் விஜய்க்கு டேக் செய்துள்ளார்.
மற்றொரு பதிவில் ‛‛எந்தவொரு தேடுதல் வாரன்ட்டும் இல்லை, ஆதாரமும் இல்லை. ஒரே ஒரு போன்கால் வைத்து இவ்வளவு நடந்துள்ளது. வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் சொல்கிறார். இதற்கு யார் பொறுப்பேற்பது. போலீஸ் மன்னிப்பு கேட்கும் வரை இதை நான் விடப்போவதில்லை. கோர்ட் மூலம் சந்திக்கிறேன். 30 ஆண்டு கடின உழைப்பு மற்றும் போராட்டம். இதேபோன்று வாரிசு நடிகர்கள் வீட்டில் செய்ய முடியுமா"" என கேள்வி எழுப்பி உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…