சாதி மதம் அற்றவர் சான்றிதழ் விவகாரம் : பார்த்திபனுக்கு நீதிபதி சொன்ன அறிவுரை
ஏப் 29, 2026
Advertisement
நடிகர் பார்த்திபன் ஆந்திராவில் நடைபெற்ற ஒரு தெலுங்கு படத்தின் பிரமோஷன் விழாவில், நான் தெலுங்கு நாயுடு என்று பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். ரசிகர்கள் மத்தியில் இருந்து எழுந்த கடுமையான விமர்சனங்கள் காரணமாக, சாதி மதம் அற்றவன் என்ற சான்றிதழை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார் பார்த்திபன். அதையடுத்து சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சாதி மதம் அற்றவர் என்று சான்றிதழை பார்த்திபனுக்கு வழங்குமாறு நீதிபதி எம்.தண்டபாணி உத்தரவு போட்டிருந்தார்.
பின்னர் அதுகுறித்து வட்டாட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சாதி மதம் அற்றவர் என்பதை சான்றிதழ் மூலம் தான் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவர் அப்படி வாழ்ந்து காட்டினாலே அது போதுமானதாகவும் என்று சொல்லி பார்த்திபனுக்கு நீதிபதி அறிவுரை கொடுத்திருக்கிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!