கூலிக்கு யுஏ சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி
ஆக 29, 2025
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த "கூலி" கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு "ஏ" சான்றிதழ் வழங்கி இருந்தது. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தியேட்டர்களில் கூலி படத்தை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் வசூலும் பாதித்தது. அதோடு தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதிலும் சிக்கல் உள்ளது.
இந்தநிலையில் கூலி படத்துக்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிடக்கோரி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
“தமிழ் படங்களில் சண்டை காட்சிகள் இல்லாத படங்களை பார்க்க முடியாது. இந்த படத்தில் மோசமான வார்த்தைகள் நீக்கப்பட்டு உள்ளன. மது அருந்தும் காட்சிகள் மறைக்கப்பட்டு உள்ளன. சென்சார் போர்டு தெரிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளன. எனவே, கூலி படத்துக்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்" என தயாரிப்பு வாதிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தணிக்கை குழு, “ஏ சான்றிதழை முதலில் ஏற்றுக்கொண்ட படக்குழு தற்போது "யுஏ" சான்றிதழ் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது. படத்துக்கு "ஏ" சான்றிதழ் வழங்குவது என அனைத்து குழுக்களும் சேர்ந்து ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. வன்முறை காட்சிகளை நீக்கி விட்டு "யு/ஏ" சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்தது.
இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!