ஜனநாயகன் படத்திற்கு எதிராக வழக்கு : பதிலளிக்கும்படி தணிக்கை வாரியத்திற்கு உத்தரவு
ஜூலை 28, 2026
Advertisement
முதல்வர் விஜய் நடித்த கடைசி படமான ‛ஜனநாயகன்" ஒருவழியாக 6 மாதம் தாமத்திற்கு பின் கடந்தவாரம் ஜூலை 23ல் வெளியானது. வினோத் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். அனிருத் இசையமைத்தார். பெங்களூரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரித்தது. விஜயின் கடைசி படம் என்பதால் வசூலை பெரியளவில் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏ சான்றிதழ், தாமதமான வெளியீடு, படம் லீக் உள்ளிட்ட காரணங்களால் எதிர்பார்த்த வசூல் இல்லை.
இந்நிலையில் இந்த படத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் ஜனநாயகன் படத்தில் பாப்பாபட்டி கிராமம் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!