
ஆக.,22ல் ‛கேப்டன் டிரைலர் வெளியீடு
ஆக 20, 2022
Advertisement
‛டெடி" படத்திற்கு பின் நடிகர் ஆர்யா - இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛கேப்டன்". ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்க, சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட்டின் பிரடேட்டர் பட பாணியில் தயாராகி உள்ள இந்த படம் அடுத்தமாதம் செப்., 8ல் ரிலீஸாக உள்ளது. தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் ஆக., 22ம் தேதி காலை 11மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். சக்தி சவுந்தர்ராஜனின் முந்தைய படங்களை போன்று இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!