கேப்டன் - தமிழக சுற்றுப் பயணத்தில் ஆர்யா
செப் 03, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குக் கூட படத்தை ஓட வைக்க என்னவெல்லாமோ செய்ய வேண்டி இருக்கிறது. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த "விக்ரம்" படத்திற்கு அவர் தனியொருவனாக பிரமோஷன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அவருக்கடுத்து நடிகர் விக்ரம் அவர் நடித்து வெளிவந்த "கோப்ரா" பயணத்திற்காக சுற்றி வந்தார். அடுத்ததாக நடிகர் ஆர்யா அடுத்த வாரம் வெளியாக உள்ள அவரது "கேப்டன்" படத்திற்காக தன்னுடைய சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
நேற்று திருநெல்வேலி, மதுரையில் அவருடைய சுற்றுப் பயணம் ஆரம்பமானது. அடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் என தன்னுடைய அடுத்த இரண்டு நாட்கள் சுற்றுப் பயணத்தை "கேப்டன் பரேடு" என ஆர்யா தெரிவித்துள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…