
தனுஷின் கேப்டன் மில்லர் பூஜையுடன் ஆரம்பம்
செப் 21, 2022
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு வருகின்ற 28 ஆம் தேதி முதல் தென்காசியில் நடைபெற இருக்கிறது. தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கைன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர் .
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!