
பரோல் படத்தில் அண்ணன், தம்பி மோதல் கதை
படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் படம் பற்றி இயக்குனர் துவாரக் ராஜா கூறியதாவது: இந்த படம் ஒரு குடும்பத்தை பற்றிய கதை. குடும்பங்களில் நாம் பார்க்காத ஒரு பக்கத்தை பற்றிய கதை இது. அனைத்து நடிகர்களும் முழு அர்பணிப்புடன் நடித்து கொடுத்தனர். இந்த படத்தின் கதைக்களத்தில் ஆண்களால் ஏற்படும் பிரச்னையை, பெண்கள் தீர்ப்பதாய் இருக்கும். இந்த படத்தில் நடித்த பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த உணர்வுகளை சிறப்பாக கடத்தியுள்ளனர்.
தாய் இறந்த காரணத்தால், தனக்குப் பிடிக்காத அண்ணனை சிறையில் இருந்து பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும், அவன் அண்ணனுக்கும் இடையிலுள்ள பிரச்னைகளும், அதைச்சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களும்தான் படம். படத்தின் கதை களம் வடசென்னை. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி தணிக்கை குழுவில் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படம் வருகிற 11ம் தேதி வெளிவருகிறது. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!