
சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் ஹனு மான்
தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருக்கிறது. இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!