நவ., 4ல் ‛அண்ணாத்த ரிலீஸ் உறுதி
ஜூலை 01, 2021
Advertisement
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதிபாபு, யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் ‛அண்ணாத்த". குடும்ப சென்டிமென்ட் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி வருகிறது. கொரோனா, ரஜினியின் உடல்நல பாதிப்பு என தடைப்பட்டு தடைப்பட்டு நடந்து வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இப்பட பணிகளை முடித்து கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார் ரஜினி. ஜூலை இரண்டாவது வாரம் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு முன்னரே அறிவித்தது. தற்போது அதை மீண்டும் உறுதி செய்துள்ளனர். அதாவது நவ., 4ல் படம் திரைக்கு வருவதாக ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் ரஜினி திரும்பி இருப்பது போன்று உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மூடப்பட்ட தியேட்டர்கள் இம்மாதம் மத்தியில் அல்லது அடுத்தமாதம் 50 சதவீதம் இருக்கைகள் உடன் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!