
பீஸ்ட் - 20 நாட்கள் நடைபெற உள்ள 2ம் கட்டப் படப்பிடிப்பு
இதற்காக சென்னையில் உள்ள தனியார் அரங்கில் மிகப் பிரம்மாண்டமான செட் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த செட் அமைக்கும் பணி ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை பரவ ஆரம்பித்த பின் அந்தப் பணிகளையும் விஜய் நிறுத்தச் சொன்னதாகத் தகவல் வெளியானது.
கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்புதான் மீண்டும் அந்தப் பணியை ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்த 20 நாட்களில் பாடல் காட்சிகள், விஜய், பூஜா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளைப் படமாக்க உள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்து ஜார்ஜியாவிலும் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள்.
2022 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!