
பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் கீடா கோலா
செப் 21, 2023
Advertisement
சிறிய பட்ஜெட்டில் தயாராகி வரும் தெலுங்கு படம் "கீடா கோலா". இப்படத்தில் மொத்தம் 8 முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன. பிரம்மானந்தம், தருண் பாஸ்கர், சைதன்யா ராவ் மடாடி, ரகு ராம், ரவீந்திர விஜய், ஜீவன் குமார், விஷ்ணு, ராக் மயூர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஏ.ஜே.ஆரோன் ஒளிப்பதிவு செய்கிறார், விவேக் சாகர் இசை அமைக்கிறார். விஜி சைன்மா இயக்குகிறார். விவேக் சுதன்ஷு, சாய்கிருஷ்ணா கட்வால், ஸ்ரீனிவாஸ் கவுசிக் நந்தூரி, ஸ்ரீபாத் நந்திராஜ் மற்றும் உபேந்திர வர்மா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை ராணா டகுபதி வாங்கி வெளியிடுகிறார். முன்னணி காமெடி நடிகரான பிரம்மானந்தம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதை நாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!