தமிழகத்தில் 100 கோடி வசூலித்த கருப்பு
மே 22, 2026
Advertisement
சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த "கருப்பு" படம் ஒரு வாரத்தில் தமிழகத்தில் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இது குறித்த அறிவிப்பை தமிழக வினியோகஸ்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உலக அளவில் 207 கோடி வசூலித்ததாக நேற்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சூர்யா பெற்றுள்ள முதல் 100 கோடி வசூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரமும் புதிய படங்கள் எதுவும் இல்லாததால் இப்படத்திற்கான வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட வெளியீட்டிற்கு முன்பாக சுமார் 100 கோடி வரையிலான சிக்கலில் இருந்த இப்படம் அறிவித்தபடி மே 14 வெளியாகவில்லை. அதைச் சரி செய்து மறுநாள் மே 15 அன்றுதான் வெளியிட்டார்கள்.
படத்தின் வசூல் காரணமாக அந்த 100 கோடி கடனில் குறிப்பிடும் அளவிற்கு அடைக்கும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!