
டியூட் படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் பைசன்
நவ 12, 2025
Advertisement
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்த படம் பைசன். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்த இந்த படம் கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்தது.இப்படம் 70 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த பைசன் படம் நவம்பர் 21ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதே தீபாவளி தினத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான "டியூட்" படம் நவம்பர் 14ம் தேதியே நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!