பிக்பாஸ் - கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன்
நவ 27, 2021
Advertisement
நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதனால் அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல். இவருக்கு பதில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. விஜய் சேதுபதி, சிம்பு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதற்கான புரொமோவை வெளியிட்டுள்ளனர். அதில் மருத்துவமனையிலிருந்து கமல் பேசுகிறார். ‛‛தொய்வில்லாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டு கழிக்க ஒரு தோழி எனக்கு உதவி செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்"" என கமல் கூறும்போது ரம்யா கிருஷ்ணன் என்ட்ரி ஆகிறார்.
பொதுவாக சனிக்கிழமைக்கான முதல் புரொமோ வீடியோவை மதியம் தான் வெளியிடுவர். ஆனால் இன்று 5 மணியளவில் தான் முதல் புரொமோ வெளியானது. கமல் இடத்தில் ரம்யா கிருஷ்ணனின் என்ட்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியை எந்தளவுக்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல போகிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!