
பரத்தின் லவ் பட படப்பிடிப்பு நிறைவு
மே 21, 2022
Advertisement
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக நடித்தவர் பரத். அதன்பின் அவர் நடித்த காதல் படம் திருப்புமுனை தந்தது. தொடர்ந்து என் மகன் படமும் அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது. சமீபகாலமாக அவரின் படங்கள் சரியான போகவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது பரத்தின் 50வது படமாக உருவாகி வரும் திரைப்படம் "லவ்". இதில் வாணி போஜன் பரத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தில் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் . இதை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!