பரத் 50வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜூலை 13, 2023
Advertisement
நடிகர் பரத் தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும், இடையில் கதை தேர்வுகளில் கோட்டை விட்டதால் தொடர் தோல்வியை சந்தித்து வந்தார். காளிதாஸ் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தாலும் மீண்டும் அவரால் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. தற்போது பரத் தனது 50வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு லவ் என தலைப்பு வைத்துள்ளனர். இதில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இப்படத்தை ஆர்.பி பாலு தயாரித்து, இயக்குகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஜூலை 28ம் தேதி அன்று வெளியாகிறது. இன்று(ஜூலை 13) இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஜூலை 28ம் தேதி அன்று வெளியாகிறது. இன்று(ஜூலை 13) இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!