ஏப்., 13ல் விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ்
மார் 22, 2022
Advertisement
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛பீஸ்ட்". ஆக் ஷன் பட பாணியில் தயாராகி உள்ள இந்த படம் ஏப்ரலில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடந்தது வந்தது. சமீபத்தில் அந்த பணிகளும் முடிந்து படம் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்சாரில் படம் ‛யு/ஏ" சான்று பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ‛பீஸ்ட்" படம் ஏப்., 13ல் தியேட்டர்களில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து ‛‛அரபிக் குத்து..., ஜாலியோ ஜிம்கானா..."" என இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!