
என்னை விட காதல் செய்ய முடியாது : இளையராஜா
இந்த விழாவில் இளையராஜா பேசியது தான் ஹெலைட் அவர் பேசியதாவது: நிகழ்கால பாரதிராஜாக்களே... நிகழ்கால இளையராஜாக்களே... நிகழ்கால பி.வாசுக்களே.... ஏன் எதிர்கால பாரதிராஜாக்களே, இளையராஜாக்களே... ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் எல்லா காலத்துக்கும் பாரதிராஜா ஒருவர் தான். பி.வாசு, இளையராஜா ஒருவர் தான். எப்படி சூரியன் மாதிரி இன்னொன்று வருவதில்லையோ. அதுபோல ஒருத்தர போல இன்னொருத்தன் வருவதில்லை. அதுலாம் பொறந்து வரணும்யா.
திருவள்ளுவரே சொல்லி இருக்காரு "செல்வம் படச்சவனா இருக்குறது வேறுஞ் தெள்ளியவனா இருக்குறது வேறுஞ் தெள்ளியவன்னா தெளிந்த அறிவோடு இருக்குறவன் தெய்வமா கூட இருக்கலாம்.. ஆனா தெளிந்த அறிவுடையவனா இருக்குறது கஷ்டம்.
இந்த படத்துக்கு காதல் செய்னு பேர் வச்சுருக்காங்க... என்ன போல காதல் செய்யுறவன் இருக்க முடியாது. ஆனா நான் எத காதலிக்குறனும்கிறதுல தெள்ளியனா இருக்கேன். இந்த படத்தோட விழாவுக்கு இவளோ பேர் வந்து ஆதரவு கொடுத்திருக்கீங்க. 16 வயதினிலே பண்ணும்போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ்த்துகள். என்றார்.
இளையராஜா இவ்வளவு ஜாலியாக இதுவரை பேசியதில்லை. சமீபகாலமாக அவரது பேச்சுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!