
பைரசி தளங்களில் வெளியான பீஸ்ட்
ஏப் 14, 2022
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் மற்றொருபுறம் படத்திற்கு அதிகளவில் நெகட்டிவ் விமர்சனங்களும் வந்துள்ளன. இந்நிலையில் சினிமா படங்களை பதிவிறக்கம் செய்ய சில பைரசி இணையதளங்கள் உள்ளன. படம் ரிலீசாகி ஒருநாள் முடிவதற்குள் பீஸ்ட் முழு படமும் இணையத்தில் வெளியாகி விட்டது. படம் ஆன் லைனில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ள அதேசமயம் விஜய்யின் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர். படத்தை ஆன்லைனில் பார்க்காமல் தியேட்டரில் பார்க்குமாறு சமூக ஊடகங்களில் வற்புறுத்தி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!