
ஆக., 11ல் பிரபுதேவாவின் பஹீரா ரிலீஸ்
ஜூலை 22, 2022
Advertisement
திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது இயக்கியுள்ள படம் பஹீரா. சைக்கோ கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆறு பெண்களை காதலித்து ஏமாற்றும் சைக்கோவாக பிரபு தேவா நடித்திருக்கிறார். அவருடன் ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், அம்ரிதா தஸ்தூர், சங்கீதா ஷெட்டி, சாக்ஸி அகர்வால், காயத்ரி சங்கர், சோனியா அகர்வால் என ஏழு நாயகிகள் நடித்திருக்கிறார்கள். பிரபுதேவா நடித்த மை டியர் பூதம் என்ற படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பஹீரா படத்தை ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!