எல்.ஆர்.ஈஸ்வரிக்கு சாதனையாளர் விருது
மார் 13, 2023
Advertisement
பழம்பெரும் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. துள்ளல் பாடல்களுக்கும், அம்மன் பக்தி பாடல்களுக்கும் புகழ்பெற்றவர். அவருக்கு "ரெயின் டிராப்ஸ்" என்ற அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா இந்த அமைப்பின் நல்லெண்ண தூதராக இருக்கிறார்.
ஆண்டுதோறும் சிறந்த பெண்களை தேர்வு செய்து விருது வழங்கி வரும் இந்த அமைப்பு இந்த ஆண்டுக்கான விழாவை தரமணியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடத்தியது. இதில் சிறந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையார் விருது வழங்கப்பட்டது. இதனை இசை அமைப்பாளர் தேவா வழங்கினார். அத்துடன் சிறந்த நடிகைக்கான விருது வடிவுக்கரசிக்கு வழங்கப்பட்டது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!