
அதிரடி மாற்றங்களுடன் மீண்டும் வரும் அவென்ஞ்சர்ஸ் : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இதனால் பல அதிரடியான மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. எண்ட் கேமில் அயர்மேனை சாகடித்தபோது உலகமே அழுதது. ஆனால் இந்த படத்தில் அயர்ன்மேன் (ராபர்ட் டவுனி) இதில் கொடூர வில்லனாக வருகிறார். அதேபோன்று கேப்டன் அமெரிக்கா (கிறிஸ் எவான்ஸ்) திரும்பி வருகிறார். அவர்தான் வில்லன் அயர்ன்மேனை நேரடியாக களத்தில் சந்திக்கும் ஹீரோ. அவருடன் இணைந்து போராடுகிறார் தோர். இதுதவிர, "எக்ஸ்-மென்" கதாபாத்திரங்களான ப்ரொபெசர் எக்ஸ், மேக்னடோ, சைக்ளோப்ஸ் மற்றும் கேம்பிட் ஆகியோரும் அவெஞ்சர்ஸ் அணியுடன் இணைகிறார்கள். இவர்களுடன் அண்மையில் அறிமுகமான "பென்டாஸ்டிக் போர்" மற்றும் "தண்டர்போல்ட்ஸ்" குழுவினரும் இணைந்துள்ளனர்.
மல்டிவெர்ஸை அழிக்க அயர்ன்மேன் தலைமையில் வரும் புதிய எதிரிகளை சூப்பர் மேன்கள் எதிர்த்து போராடுவதுதான் கதை. இந்த முறை எதிரிகளும் சூப்பர் மேன்களாக இருப்பதால் ஆட்டம் அதிரடியாக இருக்கப்போகிறது. "எண்ட்கேம்" படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இயக்கி உள்ளனர். டிசம்பர் 18 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!