துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை
மார் 22, 2025
Advertisement
தமிழ் சினிமாவில் விஜய்யின் மூன்று படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தவர் அட்லி. ஷாரூக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய "ஜவான்" ஹிந்திப் படம் 2023ல் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன்மூலம் இந்திய அளவில் பேசப்படும் இயக்குனரானார் அட்லி.
அவரது அடுத்த படத்தில் நடிக்கப் போவது சல்மான் கானா, அல்லு அர்ஜுனா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இப்போது அல்லு அர்ஜுன் அவரது படத்தில் நடிக்க உள்ளார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இப்படத்திற்கான கதை விவாதம், முன்தயாரிப்புப் பணிகள் ஆகியவை துபாயில் நடந்து வருகிறது. அங்குள்ள பெரிய நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இதற்கான பணிகளை அட்லி தனது குழுவினருடன் செய்து வருகிறார். அங்கேயே அல்லு அர்ஜுனும் தங்கியுள்ளதாகத் தகவல். அவரது தோற்றம் குறித்த ஆலோசனையில் அவர் உள்ளாராம். கடைசி கட்டத்தில் உள்ள இந்த ஆலோசனை விரைவில் முடிவடைந்து படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என்பது லேட்டஸ்ட் அப்டேட்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!