
அதர்வா-வின் புதிய பட அப்டேட்
அக் 11, 2023
Advertisement
நடிகர் அதர்வா நடித்து வெளிவந்த குருதி ஆட்டம், பட்டத்து அரசன் ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. தற்போது நிறங்கள் மூன்று, தணல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . இந்த நிலையில் தற்போது அதர்வா புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்குகிறார். இதற்கு டி.என்.ஏ என தலைப்பு வைத்துள்ளனர்.இதில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடிக்கின்றார். கிரைம் ஆக்ஷன் டிராமா ஜானரில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இப்போது தொடங்கியது. டாடா படத்தை தயாரித்த ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!