
2, 3 கதாநாயகிகள் வேண்டும் என நிர்பந்திக்கிறேனா?: அசோக் செல்வன் பதில்
வரும் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து அசோக் செல்வன் கூறுகையில், ‛நான் காதல் கதையம்சம் கொண்ட படங்களில் நிறைய நடித்துவிட்டேன். எனவே காதல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என முடிவு செய்தேன். நித்தம் ஒரு வானம் கதையை சொன்னதும் பிடித்துப்போனதால் ஒப்புக்கொண்டேன். இதில் 3 கதைகள் உள்ளன. மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளேன். கொங்கு மண்டல மக்கள் பேசும் மொழி சாயலில் பேசி நடித்துள்ளேன். எனது படங்களில் 2 அல்லது 3 கதாநாயகிகள் இருந்தால் தான் நடிப்பேன் என இயக்குனரை நான் நிர்பந்திப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அது தானாக அமைந்துவிடுகிறது. ஓ மை கடவுளே படத்தின் 2ம் பாகத்தை வாய்ப்பு அமையும்போது எடுப்போம்" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…