
துணிவு படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய வினோத்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது பற்றி ஏற்கனவே தகவல் வெளியானாலும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பியபடியே இருக்கின்றனர். இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகிறது என்று உறுதி ஆகிவிட்ட சூழலில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தற்போது துவங்கியுள்ளார் இயக்குனர் வினோத். டப்பிங் ஸ்டுடியோவில் வினோத் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!