
தியேட்டர் வெற்றிக்காகக் காத்திருக்கும் ஆர்யா
இருந்தாலும் 2021ல் ஓடிடி தளத்தில் வெளிவந்த அவரது "டெடி, சார்பட்டா பரம்பரை" ஆகிய படங்கள் அவருக்கான இடத்தை அப்படியே தக்க வைத்தது. "சார்பட்டா பரம்பரை" படத்திற்காக அவர் கொடுத்த ஈடுபாடு, அவரது உழைப்பு, நடிப்பு என விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். அப்படம் மட்டும் தியேட்டர்களில் வெளிவந்திருந்தால் பெரும் வசூலைக் குவித்திருக்கும் என்று திரையுலகினர் பேசினார்கள். அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த "அரண்மனை 3, எனிமி, கேப்டன்" ஆகிய படங்களும் சரியாகப் போகவில்லை.
தியேட்டர் வசூலில் தனக்கான இடத்தை மீண்டும் காப்பாற்ற முத்தையா இயக்கத்தில் "காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்" படத்தில் நடித்துள்ளார். அப்படம் இந்த வாரம் ஜுன் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. முத்தையா இயக்கும் படங்கள் ஒரு ஆவரேஜான வெற்றியை எப்போதும் கொடுத்துவிடுகிறது. அந்த ஒரு ஆவரேஜான வெற்றியாவது ஆர்யாவுக்குக் கிடைத்தால் அவரது அடுத்த வெளியீடுகளுக்கு பேருதவியாக இருக்கும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!