
மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா
ஜூன் 30, 2022
Advertisement
குட்டி புலி, கொம்பன், மருது போன்ற படங்களை தொடர்ந்து தற்போது கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் விருமன் படத்தை இயக்கி இருக்கிறார் முத்தையா. இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தற்போது அவர் தொடங்கி உள்ளார். வழக்கம்போல் மதுரை மண்வாசனை கதையில் உருவாகும் அந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கப் போகிறார். இதற்காக ஆர்யாவை பக்கா வில்லேஜ் கெட்டப்புக்கு மாற்றும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்ட முத்தையா, விருமன் படம் திரைக்கு வந்ததும் ஆர்யா நடிக்கும் படத்தை தொடங்குகிறார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!