தமிழுக்கு வரும் இன்னொரு விக்ராந்த்
ஆக 26, 2023
Advertisement
விஜய்யின் உறவினரான விக்ராந்த் ஏற்கனவே இங்கு நடித்து வருகிறார். தற்போது அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்" படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் இருந்து ஒரு விக்ராந்த் தமிழுக்கு வருகிறார்.
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் விக்ராந்த் சினிமாவில் அறிமுகமாகிறார். "ஸ்பார்க் லைப்". என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மெஹ்ரின் பிர்சாடா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். டேப் ப்ராக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோ விக்ராந்தே இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறார் . ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கிறார். நாசர், சுஹாசினி மணிரத்னம், வெண்ணேலா கிஷோர், சத்யா, பிரம்மாஜி, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சம்மக் சந்திரா, அன்னபூர்ணம்மா, ராஜா ரவீந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் சமீபத்தில் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு. நவம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!