கொட்டுக்காளிக்கு மேலும் ஒரு சர்வதேச விருது
ஜூன் 25, 2024
Advertisement
விடுதலை, கருடன் படங்களுக்கு பிறகு சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் "கொட்டுக்காளி". இதில் மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் தியேட்டரில் வெளியிடப்படவில்லை என்றாலும் பல சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பி வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற இந்த படம் தற்போது மேலும் ஒரு விருதினை பெற்றிருக்கிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் “டிரான்சில்வேனியா நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் எங்களது "கொட்டுக்காளிக் திரைப்படம் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்று அசத்தியுள்ளது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என தெவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!