ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத்
மே 20, 2024
Advertisement
"ஆர்ஆர்ஆர்" படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் "தேவரா". இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் நந்தமுரி கல்யாண் ராம் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா தயாரிக்கிறார்கள்.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகமான "தேவரா பார்ட் 1" தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு "பியர் சாங்" என்ற பாடல் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அனிருத் பாடியிருக்கிறார். சந்தோஷ் வெங்கி கன்னடம் மற்றும் மலையாளத்தில் பாடியிருக்கிறார். பாடலை தெலுங்கில் சரஸ்வதி புத்ரா ராமஜோகய்யா சாஸ்திரி, தமிழில் விஷ்ணு எடவன், ஹிந்தியில் மனோஜ் முண்டாஷிர், கன்னடத்தில் வரதராஜ் மற்றும் மலையாளத்தில் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!