
ஆனந்தியின் ஒயிட் ரோஸ்
திருமணத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ஒயிட் ரோஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை ஆர். கே. சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோ வின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சுசி கணேசனின் உதவியாளர் ராஜசேகரன் இயக்குகிறார். தயாரிப்பளர் ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ராஜசேகரன் கூறியதாவது: மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. சைக்கோ திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!