
அம்பேத்கர் பிறந்தநாள் விழா: ஆயத்தமாகிறார் நடிகர் விஜய்
இதில் உலக அளவில், மூன்றாம் இடத்தில் விஜய் இருக்கிறார். தற்போது, அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 64 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், வரும் 14ல், அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று, மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டம்தோறும் நடக்கும் இவ்விழாவில், அனைத்து அணி தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றும், முன்கூட்டியே போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த், நேற்று நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசியல் ஆசையோடு இருக்கும் விஜய், அதற்கு முன்னோட்டமாக தலித் சமுதாயத்தின் ஆதரவை பெறும் நோக்கில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!