இந்திய அளவில் ஓடிடியில் முதலிடம் பிடித்த அமரன்
டிச 07, 2024
Advertisement
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த படம் "அமரன்". இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்து உலக அளவில் 300 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
நேற்று முன்தினம் டிசம்பர் 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இப்படம் வெளியானது. அதற்குள்ளாகவே இந்திய அளவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்படும் படத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மற்ற மொழிகளில் வெளியான படங்களை பின்னுக்குத் தள்ளி உடனே இப்படி முன்னேறியிருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி காஷ்மீர் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக "அமரன்" வந்தது. அதனால், இந்திய அளவில் இந்தப் படத்தைப் பார்க்க அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!