ஓராண்டாக நடந்த அமரன் படப்பிடிப்பு நிறைவு : விரைவில் ரிலீஸ் அறிவிப்பு
மே 25, 2024
Advertisement
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் "அமரன்". காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் பயோபிக் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
ஓராண்டாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “கடைசி பிரேம் மற்றும் துப்பாக்கி சல்யூட்டுக்கான நேரம்” என சிறு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் ஆரம்பமானது. அதிக நாட்கள் படப்பிடிப்பு அங்குதான் நடைபெற்றது. சுமார் 75 நாட்கள் வரை நடைபெற்றுள்ளது. சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படத்தின் தலைப்பை "அமரன்" என அறிவித்தார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் விரைவில் படம் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…