
தீபாவளிக்கு ‛அமரன் ரிலீஸ்
ஜூலை 17, 2024
Advertisement
அயலான் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வர உள்ள படம் ‛அமரன்". ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. முகுந்த் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டு மேலாக படப்பிடிப்பு நடந்து வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இந்த படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால் பட பணிகள் முடிய தாமதம் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில் ‛அமரன்" படத்தை தீபாவளி அன்று அக்., 31ல் ரிலீஸ் செய்வதாக படத்தை தயாரித்துள்ள கமலின் ராஜ் கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!