சினிமாவின் மவுண்ட் எவரெஸ்ட்டை சந்தித்தேன் - அல்போன்ஸ் புத்ரன்
ஜன 10, 2023
Advertisement
"நேரம், பிரேமம்" படம் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தது பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “எனது வாழ்க்கையில் முதல் முறையாக சினிமாவின் மவுண்ட் எவரெஸ்ட் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்தேன். அவரது வாயிலிருந்து சினிமாவுக்கான ஐந்தாறு கதைகளைக் கேட்டேன். பத்து நிமிடத்திற்குள் எனது புத்தகத்தில் அது பற்றிய சிறு குறிப்புகளை எழுதிக் கொண்டேன். அவர் ஒரு மாஸ்டர் என்பதால் அவரது அனுபவங்களைப் பகிர்ந்தார். ஆனால், ஒரு மாணவனாக அவர் சொல்வதில் ஏதாவது விட்டுவிடுவேனோ என பயந்தேன். நம்பமுடியாத இந்த கனவான சந்திப்புக்காக இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!