தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்த அல்லு அர்ஜுன்
மே 20, 2021
Advertisement
கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்த சமயத்தில், அதன் தீவிரம் தெரியாமல், திரையுலகினர் பலரும் தங்களது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்தனர். அதனால் வயதானவர்கள் மட்டுமன்றி, இளம் நடிகர்களுக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டது அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சமீபத்தில் அதிலிருந்து மீண்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினரையும் தனது வீடு மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரையும் தடுப்பூசி போட செய்துள்ளார். தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி தடையில்லாமல் கிடைப்பதற்கு, தானே முன்னின்று ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார் அல்லு அர்ஜுன்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!