அலர்ஜி பிரச்சனை : ஆயுர்வேத சிகிச்சைக்கு தயாராகும் அடா சர்மா
ஆக 06, 2023
Advertisement
கடந்த மே மாதம் வெளியாகி மிகப் பரபரப்பை ஏற்படுத்திய படம் தி கேரள ஸ்டோரி. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அடா சர்மா. ஹிந்தியில் அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். தமிழில், ‛இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் தி கேரள ஸ்டோரி திரைப்படத்திற்கு கிடைத்த எதிர்மறை விளம்பரம் இவரை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கி விட்டது. தொடர்ந்து படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வரும் அடா சர்மா நடிப்பிற்கு சில நாட்கள் ஓய்வு கொடுத்து விட்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ள தயாராகி வருகிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில நாட்களாகவே என் கை கால்களில் அலர்ஜி காரணமாக தோலில் தடிப்பு ஏற்பட்டது. இதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் குணமாகவில்லை. இதனால் தற்போது ஆயுர்வேத சிகிச்சைக்கு தயாராகி வருகிறேன். அதனால் படப்பிடிப்புகளில் இருந்து சில நாட்கள் விடுமுறை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள அடா சர்மா, யாரும் இதைப் பார்த்து பயந்து விட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!