
அஜித் 62வது படத்தின் அறிவிப்பு தள்ளிப்போகிறது
விரைவில் அஜித் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அஜித்தின் தந்தை மரணம் அடைந்ததால் இப்படத்தின் அறிவிப்பை மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்கு லைகா நிறுவனம் தள்ளி வைத்திருக்கிறார்கள். அடுத்த மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
குறிப்பாக மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அன்றிலிருந்து அவரது 62வது படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தை இந்த ஆண்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த லைகா நிறுவனம் தற்போது படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் அடுத்த ஆண்டில் அஜித் 62 வது படத்தை வெளியிடலாம் என்ற முடிவில் உள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!