
ஏகே 62 படத்திற்காக அஜித் எடுத்த திடீர் முடிவு
இந்த நிலையில் இப்படத்தை மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி நான்கே மாதத்தில் முடிக்க திட்டமிட்டு இருந்த அஜித் குமார், அவசர அவசரமாக படப்பிடிப்பு நடத்தினால் திட்டமிட்டபடி ஒரு தரமான படமாக கொடுக்க முடியாது என்பதால் தனது உலக சுற்றுலா பயணத்தை மேலும் சில மாதங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறாராம். குறிப்பாக விஜய்யின் லியோ படம் பிரமாண்டமாக உருவாகி வருவதால் அந்த படத்திற்கு இணையாக தனது 62 வது படத்தையும் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும் அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இடத்தில் அதிகப்படியான அவசரம் காட்டாமல் நிதானமாக படப்பிடிப்பு நடத்துங்கள். திட்டமிட்டதை விட கூடுதலாக பல மாதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு நான் உலக சுற்றுப்பயணத்தை வைத்துக்கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறாராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!