
ஐதராபாத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் அஜித்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற பயிற்சிகளில் அஜித் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகின. இந்த பயிற்சியின் முடிவில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றார். தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வரும் அஜித், அந்த படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்கியுள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாததால் ஐதராபாத்தில் உள்ள துப்பாக்கி பயிற்சி அகடமியில் அஜித் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் அசத்தலான துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!