
நான்கே மாதங்கள்... பரபரக்கும் அஜித் 62
அது என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது 2023ம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜைக்கு அப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்து விட்டார்கள். அதேப்போன்று தனது 62 வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் போதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டே படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் அஜித் குமார்.
அதோடு நான்கே மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட வேண்டும். இடையில் எந்தவித பிரேக்கும் கொடுக்கக் கூடாது என்றும் ஒரு அதிரடி கண்டிஷன் போட்டுள்ளாராம். இந்த நிலையில் அஜித் 62 ஆவது படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!