
மீண்டும் அஜித் - வினோத் கூட்டணி
இதனிடையே, இதுவரை எடுத்த "வலிமை" படக் காட்சிகளை படக்குழுவினர் போட்டு பார்த்திருக்கிறார்கள். படம் வேற லெவலில் இருப்பதாகவும், சாதாரண ரசிகர்களுக்கு இப்படம் புரியுமா என்ற சந்தேகமும் வந்ததாகவும் சொல்கிறார்கள். அதனால், சில காட்சிகளை திருத்தவும் முடிவு செய்துள்ளார்களாம். இருந்தாலும் படத்தைப் பார்த்த அஜித், மீண்டும் வினோத் உடன் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளாராம். அந்தப் படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்கப் போகிறாராம்.
"நேர்கொண்ட பார்வை, வலிமை" இரண்டு படங்களின் சம்பளம், வியாபார விவகாரம் ஆகிய கணக்குகளில் கொஞ்சம் முன்னே, பின்னே இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். அந்தப் படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக மட்டுமே எடுக்க வேண்டும் என அஜித் கேட்டுக் கொண்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!