
மீண்டும் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் தன்னுடைய "முசாபிர்" ஆல்பப் பணிகளை ஆரம்பித்துள்ளார். அது குறித்து சமூக வலைத்தளங்களில் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “நீங்கள் அதைப் பார்க்கும் போது ஒரு மேஜிக் உருவாவதைப் பார்க்க முடியும், அது ஒரு புதிய உலகம்… மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டேன். மீண்டும் திரும்பியது சிறப்பு…. நான் இங்கு நீண்ட நாட்களாக இல்லாததால்… படப்பிடிப்பில் இருப்பது போல் எதுவும் சிறப்பில்லை…” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா தற்போது "முசாபிர்" என்ற ஆல்பம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த ஆல்பத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. தமிழில் "பயணி", தெலுங்கில் "சஞ்சாரி", மலையாளத்தில் "யாத்ராக்காரன்", ஹிந்தியில் "முசாபிர்" என்றும் இந்த ஆல்பம் வெளியாக உள்ளது. தமிழ்ப் பாடலை அனிருத் பாடுகிறார். போஸ்டரில் ஐஸ்வர்யாவின் பெயர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என போடப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!