
தங்கையின் திருமணத்துக்காக பெங்களூரு வந்த ஐஸ்வர்யா ராய்
மார் 17, 2021
Advertisement
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து, உலக அழகியாக மாறிய ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் நுழைந்து, அப்படியே பெரிய குடும்பத்தின் மருமகளாகவும் மாறினார். இதை தொடர்ந்து பெங்களூருவுக்கு அவர் எப்போதாவது ஒருமுறை வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதேசமயம் குடும்ப நிகழ்ச்சிகள் எதையும் அவர் மிஸ் பண்ணுவதும் இல்லை. இந்தநிலையில் நீண்ட நாட்கள் கழித்து தனது தங்கையின் திருமண நிகழ்வுக்காக பெங்களூருவுக்கு கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆரத்யாவுடன் வந்திருந்தார்.
மணமகள் ஸ்லோகா, ஐஸ்வர்யா ராயின் சித்தி மகளாவார். பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற மெகந்தி நிகழ்ச்சியின்போது, அங்கே வந்திருந்த அனைவரிடமும் சகஜமாக கலந்து பழகி ஆச்சர்யப்படுத்திய ஐஸ்வர்யா ராய், மணமக்களுடன் மேடையிலும் நடனம் ஆடி விருந்தினர்களை வியப்படைய வைத்தாராம். .
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!