
ஜெயம் ரவியின் அகிலன் பட சிங்கிள் பாடல் வெளியானது
பிப் 28, 2023
பூலோகம் படத்தை அடுத்து மீண்டும் கல்யாண் இயக்கத்தில் அகிலன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். துறைமுகம் பின்னணியில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இப்படம் வருகிற மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அகிலன் படத்தின் பிரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொறக்கும் போதும் துரோகம் பண்ணு, இறக்கும்போதும் துரோகம் பண்ணு என்ற ஒரு சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் முழுக்க ஜெயம் ரவியின் ஆக்சன் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. சோசியல் மீடியாவில் வைரலாகின இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி இருக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!