
அகத்தியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
டிச 25, 2024
Advertisement
பாடலாசிரியரான பா.விஜய், இளைஞன், ஸ்டாரபெரி, நய்யப்புடை, ஆருத்ரா உள்ளிட்ட படங்களில் நடிகராகவும், ஸ்டாரபெரி, ஆருத்ரா ஆகிய படங்களில் இயக்குனராகவும் பன்முகம் காட்டியவர். தற்போது நடிகர்கள் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா ஆகியோரை வைத்து "அகத்தியா" எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில் யோகி பாபு, விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. இப்போது இத்திரைப்படம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!